பரந்த ஞாலப்பெருவெளியெங்கும்
வியாபித்திருக்கின்றன
என் இன்மையும் இருப்பும்...
நன்றாய் இருப்பதாய் நம்பும்
மகனைத் தொலைத்த தாயின்
மனநிலைபோல
இருப்பை விட
ஆழப் பதிந்துபோனது
இல்லாமையின் நிழல்......
கதறல்களின் மத்தியில் சவமாய்க்
கிடக்கும் தந்தையை மறந்து
எதிர்வீட்டு சிறுமியை
விளையாட அழைக்கும்
குழந்தையாய், எனக்குத் தெரிகின்றன இரண்டும்......
கால நதியின் கரையினில்
வசந்தகால வண்ணதுப்பூச்சியின்
பூதேடும் சிலிர்ப்பின் படபடப்பாய்,
நான் இரண்டுமாகிறேன்
இரண்டுமாய் நானிருக்கிறேன்....!
No comments:
Post a Comment